Friday, March 11, 2011

நீ, நான், அது பற்றி....................

எனது கருத்துக்கள்,

மற்றவர்களிடம் இருந்து

என்னை மிக அந்நியமாக்கிவிடும்.

என்னைப் போலவே,

அந்நியமாகிப் போனவர்கள்

எனக்கு அந்நியோன்யம் ஆகிப்போவார்கள்.

அப்படி அந்நியோன்யம் ஆகிப் போனவர்கள்

என்னுடன்

சித்தாந்ததிலும், கோட்பாடுகளிலும்

என்றும் பிளவு பாடாத உயிர்த் தோழர்களாகிவிடுவார்கள்.

ஏன் ....?

உண்மையின் முழு உண்மையானதையும்,

பொய்யின் முழு நிர்வாணத்தையும்

அவர்களும் என்னைப் போலவே அறிந்ததனால்.

விழிப்புணர்வும், புரிதலும் தான்

எனது சிதந்தம்.

நாளையைப் பற்றிய கேள்விகள்

இன்று மிக அர்த்தமற்றவை.

இன்று, இப்பொழுது, இங்கே,

இது மட்டும் தான் உண்மை.

நாளைய பொழுதுகளுக்காய்

இன்றைய பொழுதுகளை

செதுக்கிக் கொண்டிருப்பதாய் அவர்கள் சொல்லுகின்றார்கள்.

அது முற்றிலும் போலியானது...................

ஏனெனில்,

நாளைய பொழுதுகளும்

இன்றைய பொழுதுகள் போலவே

உன்னைக் கடந்து போகும்.

இன்றைப் போலவே

நாளைய பொழுதுகளையும்

நீ நாளண்டைய பொழுதுகளுக்காய்

செதுக்கி செலவளித்துவிடுவாய்.

இவ்வாறே உனது வாழ்க்கை

செதுக்கி செலவழிப்பதிலையே முடிந்துவிடுகிறது.

எதையும் செதுக்கி விடாதே

அது சிலையாகத் தான் இருக்கின்றது.

நீ தான் அதை கண்டுகொள்ளவில்லை.

கடவுளாகிய இயற்கை,

இயற்கையாகிய கடவுள்,

மனிதனாகிய கடவுள்,

கடவுளாகிய மனிதன்

எதையுமே நீ கண்டுகொள்ளவில்லை.

காதலையும் காமத்தையும் கூட

நீ காணவில்லை.

ஏனெனில்,

உன் பொழுது செதுக்கிய சிற்பதை செதுக்குவதிலையே

முடிந்து விடுகின்றது.

ஒரு விபச்சரியைய் விட,

நீ கடவுளுக்கருகில்

ஒரு பொழுதும் இருக்க முடியாது.

நீ எப்பொழுதும் காமத்தைப் பற்றியும்,

மற்றவர்களுடன் புணர்வதைப் பற்றியும்

சிந்திக்கும் பொழுது,

ஒரு விபச்சாரி

கடவுளைப் பற்றியே சிந்திக்கின்றாள்.

நீ பெண்களுக்காய்

கோவில் செல்லும் பொழுது,

அவள் தன் படுக்கயறையில் கடவுளை தரிசிக்கின்றாள்.

உன்னை நீ பெரியளவில் மாற்று,

மிகப்பெரிய விழிப்புணர்வுக்கு உள்ளாகு

என்னைப் புரிந்துகொள்.

மற்றவர்களுக்கெல்லாம் நீ

அந்நியனாகி,

என்

அந்நியோன்யனாகிவிடலாம்.

-உங்கள் அந்நியன்,

அமரசேகரம் திவாகர்.

No comments:

Post a Comment